பிட்காயின் என்பது என்ன?...

 பிட்காயின் என்பது என்ன?...



பிட்காயின் என்பது கண்களால் பார்க்க முடியாத ஒரு வகை பணமாக இணையத்தில் மட்டும் பரிமாறப்படும் ஒரு வகை பணமாக உள்ளது.... இதனை கொண்டு இணையத்தில் எளிதாக பொருட்களை வாங்க முடியும்.


இப்போது பிட்காயின் என்ற ஒன்று புரிந்தும் புரியாமலும் உள்ளது. பங்கு சந்தை பட்டியலில் இருந்து நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது போன்று பிட்காயின் வாங்க முடியும் என்று ஒரு சிலரும்,ஒரு சிலர் இது பொய்யான தகவல் என்றும் கூறுகின்றனர்....


பிட்காயின் என்பது ஒரு வகை நவீன பணம்.அதாவது ரூபாய், டாலர், போன்று  தாள்களில் அச்சிடப்பட்டு பயன்படுத்த முடியாது..


இந்த வகை பிட்காயின் வைத்து கொள்ள இணையத்தில் எளிதாக ஒரு கணக்கை உருவாக்க முடியும்.அதற்கான இணையதளம்  (block chain.info).


இந்த வகை நாணயம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது..
பிட்காயின் மதிப்பை ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியால் நிர்ணயம் செய்ய முடியாது...
பிட்காயின் வாங்க அல்லது விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் இணைய தளத்தில் பரிவர்த்தனை கணக்கு இருக்க வேண்டும்...


இந்தியாவில் இதற்காக சில இணையதளங்கள் உள்ளன.. unocoin.comzebpay.combitxoxo.comcoinsecure.in....


இந்த தளத்தில் பரிவர்த்தனை கணக்கு வைத்து கொள்ள எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவை இல்லை...


பிட்காயின் வாங்க அல்லது விற்க வேண்டும் என்றால் இந்த சில இணையதளம் மட்டுமே பயன்படுத்த முடியும்..


சில நாடுகளில் இதற்காக தானியங்கி எந்திரங்கள்(🏧 ATM) இருக்கிறது. இந்தியாவில் இதற்காக ATM விரைவில் வர இருக்கிறது.


பிட்காயின் தற்போது பிளிப்கார்ட், அமேசன், போன்ற இணையதள வர்த்தகத்தில் ஏற்று கொள்கின்றனர்...


இதற்கான கணக்கு துவங்கும் போது நம்முடைய அடையாள அட்டை கேட்பார்கள்...இதனை கொண்டு இணையத்தில் எளிதாக கணக்கு தொடங்க முடியும்.....


இந்த வகை நாணயம் பற்றி சிலருக்கு பல சந்தேகங்கள் இருந்தாலும் இந்தியாவில் பலர் இதில் கணக்கு தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது....


பிட்காயின் கணக்கு இந்தியாவில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 2500  முதல் 3000 தொடங்க படுகிறது...இது வரை இந்தியாவில் 5 லட்சம் வரை கணக்குகள் தொடங்கி உள்ளனர்...
பிட்காயின் 2009 ஆண்டு உருவாக்கப்பட்ட போது இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 120 ($1.5)ஆகவும்...தற்போது 2021ல் இதன் மதிப்பு 42,76,206 ($57016) ரூபாயாக உள்ளது......


Comments